நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இதையடுத்து தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அரசு கடுமையான கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் இருந்த 300 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருவதால் பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது.