தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. மேலும் இந்த புயல் நாளை மாலை வடக்கு ஆந்திர- ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும். பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிஷா மற்றும் ஆந்திரா பகுதிகளை நெருங்கும் என்று தெரிவித்துள்ளது.
.