நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி இன்று மசனகுடியில் நாலாவது நபரை தாக்கி கொன்ற நிலையில் புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடபோட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டில் 4 பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை T23 என்று பெயரிடப்பட்ட புலி கொன்றது.
புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க கடந்த 24ம் தேதி உத்தரவிடப்பட்டது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் கூண்டில் புலி சிக்காததால் மயக்க ஊசி செலுத்த இயலாததால் சுட்டுக் கொல்ல உத்தரவு. ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நிராஜ் உத்தரவிட்டுள்ளார்.