கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மு.மங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இட்லி விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் மூதாட்டியிடம் இட்லி வாங்கிய சுதா என்ற பெண் தனது குழந்தைக்கு ஊட்ட முயன்ற நிலையில் இட்லியில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்தது மூதாட்டியிடம் இட்லி வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பெரியவர்கள் என 20 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.