கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. அதிலும் கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகின்றது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை காரணமாக வால்பாறையில் பாதுகாப்பு சுவர் இடிந்ததால் மலைச்சரிவில் உள்ள வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.