சிங்கப்பெருமாள் கோவில் அருகே பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மின்சார ரயில் சேவை மாற்றப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கடற்கரை-செங்கல்பட்டு 9.32, 10.08, 10.56, மணி மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் செல்லும். செங்கல்பட்டு மற்றும் கடற்கரை காலை 11.30, மதியம் 12.20, 1 மணி ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயக்கப்படும்.