தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல் படுத்தப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கும் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு தளர்வில் அரசு பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் 100% பயணிகளுடன் தனியார் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு தனியார் பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.