ஒலிம்பிக் பதக்கம், உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி வீரர் வரீந்தர் சிங் (75) காலமானார். இவர் 1975ல் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற அணி, 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணி, 1973இல் ஆம்ஸ்டர்டாம் உலக கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணி என பல்வேறு வெற்றிபெற்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
2007ஆம் ஆண்டு வரை வரீந்தர் சிங்கிற்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.