Categories
கிரிக்கெட் விளையாட்டு

Flash News: ஐபிஎல் போட்டி… ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் அனுமதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான அட்டவணை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய தொடர் முடிந்த பின் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்த முறை மகாராஷ்ட்ராவில் உள்ள நான்கு மைதானங்கள் மற்றும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் என இரண்டு மாநிலங்களில் மட்டுமே நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில் சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் வெள்ளி ஆகிய நகரங்களையும் இறுதி செய்து வைத்திருக்கிறது. ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதனால் சென்னையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியை பார்க்க ஆடுகளத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது.

Categories

Tech |