தூத்துக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தூத்துக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய கடம்பூர் ராஜு உட்பட அதிமுகவினர் 950 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.