Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – வெடித்தது பிரச்சினை…!!!

தமிழகம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

நேற்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களோடு திடீர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார். கட்சி தலைமை, கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Categories

Tech |