தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்போடு செயல்பட்ட அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளனர் .
இந்நிலையில் அதிமுக அரசின் நடவடிக்கையால் எந்த துறைகளில் எவ்வளவு இழப்பு என்று சிஏஜி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம் கோவையில் தேவையைவிட ரூபாய் 16.39 கோடிக்கு மருந்துகள் வாங்கி குவித்தது, ராஜீவ்காந்தி மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் கட்டியதில் ரூபாய் 55.53 கோடி இழப்பு, 2014 முதல் 19 வரை தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்ததால் மின்வாரியத்துக்கு ரூபாய் 171.57 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.