தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலாற்றின் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
மாதனூர்- உள்ளியை இணைக்ககூடிய தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 50 கிராம மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.