Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Flash News: சென்னைக்கு அலர்ட், உடனே….. தமிழக அரசு அவசர உத்தரவு…..!!!

சென்னையில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி உள்ளதாக தமிழக அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி உள்ளதாக தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதனால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதனைத் தடுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 5,400 மருத்துவர்களை சென்னைக்கு உடனே வர உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை திட்டம், கபசுரக் குடிநீர் கொடுக்கும் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

Categories

Tech |