சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியான காலம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருந்தது போலவே ஒரு நாம் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியான காலம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும். அதனால் பொதுமக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மற்றும் சோம்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் வீடு வீடாக வரக்கூடிய மாநகராட்சிகள் பணியாளர்களிடம் பொதுமக்கள் உடனே தெரிவிக்கவும் என கூறியுள்ளார்.