Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் மீண்டும் இன்று முதல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தலைமை செயலாளர்  உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் 3 க்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பு இருந்தால் அப்பகுதியில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நோயைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |