நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார்
கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். நாட்டில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி என்று தெரிவித்துள்ளார்.