Categories
மாநில செய்திகள்

Flash News: டிசம்பர்., 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

பொதுமுடக்கத்தை மேலும் டிசம்பர் 31 வரை நீட்டிக்க புதுச்சேரி அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது புதுச்சேரியில் கொரோனா பொதுமுடக்க விதிமுறைகள் தற்போதுள்ள தளர்வுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்தி கொள்ளலாம் என்றும், முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |