நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூலை 13-ம் தேதி நீதிபதிஎம் .எஸ் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் தவிர ரீல் ஹீரோ இருக்கக்கூடாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நடிகர் விஜய் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய்யை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துக்கள் நீக்குவது பற்றி நான்கு வாரங்களுக்குப் பின் விசாரணை செய்யப்படும். வணிக வரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிடுட்டு வரித் தொகையை சொல்லவேண்டும். மீதமுள்ள 80 சதவீத வரித் தொகையை அடுத்த ஒரு வாரத்தில் விஜய் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.