Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் கொடுமையான சம்பவம் – பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார் . இவருக்கு உதவியாளராக முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விஏஓ அலுவலகத்துக்கு வந்த கோபிநாத் என்பவரை முறையான ஆவணங்கள் எடுத்து வரும்படி விஏஓ கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனை பார்த்த உதவியாளர் முத்துசாமி தகுந்த ஆவணங்களை எடுத்து வரும்படியும் திட்டக், விஏஓ வை அப்படி திட்ட கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத் பட்டியலிட சமூகத்தைச் சேர்ந்த உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்துள்ளார். இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |