கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிறந்து 8 நாளே ஆன ஆண் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஏழுமலை மற்றும் சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தன் மனைவி சிவரஞ்சனி மீது அடிக்கடி சந்தேகம் கொண்டு சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தனது மனைவி கர்ப்பம் ஆனதை அறிந்து சந்தேகம் அடைந்தார். அந்த சந்தேகத்தில் குழந்தை பிறக்கும் வரையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் இவர்கள் இருவருமே கருப்பு நிறத்தில் இருப்பதால் குழந்தை எதிர்மறையாக வெள்ளையாக பிறந்துள்ளது. அதனால் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மதுபோதையில் ஏழுமலை தகராறு செய்துள்ளார். அதன்பிறகு இருவரும் தூங்கிய நிலையில், நள்ளிரவில் ஏழுமலை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.