தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுடைய தேவையை அறிந்து, மக்களுடைய நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வந்தார். இதனால் மக்களிடையே நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் தேவைப்படும் கருவிகள், மருந்து மாத்திரைகளுடன் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.