நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பள்ளிகளை திறக்க மட்டும் அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக திருச்,சி கே கே நகர் ,காட்டூர் மலையப்ப நகர் பகுதிகளில் அரசு அனுமதியின்றி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.