Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… 3 வாரங்களுக்கு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 16 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் தொடக்கத்தில் பாடங்கள் நடத்த வேண்டாம். சிறுவினாக்கள், ஒருவரி வார்த்தைகள் போன்ற எளிய நடை முறையில் பாடங்களை மூன்று வாரங்களுக்கு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |