தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு போதிய அளவு ஸ்டாக் அனுப்பாததால் தமிழகத்தில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் நோ ஸ்டாக் போர்டு போட்டு மூடப்பட்டுள்ளன.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கடந்த 25 நாட்களாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருவதால் ஏற்பட்ட இழப்பை சமாளிப்பதற்கு செயற்கையாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.