Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் மக்கள் இனி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செல்போன் மூலம் புகார் அளிக்கும் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து மக்களுக்கு செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செல்போன் மூலம் புகார் அளிக்கும் புதிய வசதி தொடங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான உதவி மையம் தலைமைச் செயலகத்தில் செயல்படும். பொதுமக்கள் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |