தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 90 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 144 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 48-லிருந்து 82 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 862- இல் இருந்து 927 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. மேலும் தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.