Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் மீண்டும் முழு முடக்கம்?…. சுகாதாரத்துறை அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் ஊரடங்கு பற்றி பரவி வரும் தகவல் உண்மையில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்ததால், ஊரடங்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவிவரும் தகவலில் உண்மையில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. ஆனால் கொரோனா பரவலைத் தடுக்க சில கட்டுப்பாடுகள் மட்டும் மீண்டும் விதிக்கப்படும். பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |