Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் 1 நாள் மட்டும் இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர்.

இதையடுத்து இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு இரவு 7 மணிக்கு மிகச்சரியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இந்நிலையில் தேர்தலன்றுவாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவை  என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில் குறைந்தபட்சம் 5கிமீ க்கு சலுகை. இலவச வாகன வசதியை பெற விரும்புவோர் ஊபர் செயலி மூலம் முன்பதிவு செய்யவேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |