Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் 511 மாணவிகளுக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

கொரானா காலத்தில் குழந்தை திருமணம் நடந்துள்ளதாக வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிந்து உடனடியாக பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி வீடு வீடாக சென்று 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் 511 மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு மாணவர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பள்ளியிலிருந்து இடைநின்றுள்ளனர். இந்த மாணவர்களையும் பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர். இதனையடுத்து‌ 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேருக்கும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 417 பேருக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 45 பேருக்கும், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 37 பேருக்கும், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 10 பேருக்கும் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

Categories

Tech |