தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஆறு மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 15,000-ஐ தாண்டியுள்ள நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள ஆறு மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை தினமும் எவ்வளவு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வரும் நாட்களில் கொரோனா நோயாளிகள் பாதிப்பு உச்சத்தை எட்ட கூடும் எனவும் எச்சரித்துள்ளது.