தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 34 ஆவின் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் புகார் முறைகேடு காரணமாக ஆவின் நிறுவனத்தின் 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஊழல் புகாருக்குள்ளான சென்னை மார்க்கெட்டிங்க் பிரிவு பொது மேலாளர் ரமேஷ்குமார் விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.