தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் வெற்றிக்குப் பின் பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் கூறிய விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும். தொண்டர்கள் கொரோனா தொடர்பான விதிகளை பின்பற்ற தலைவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.