Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. பதிவுத்துறை அலுவலகங்களில் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையை உதவி செய்யும் வகையில் சார்பாதிவாளர்கள் மேடையை சுற்றி உள்ள தடுப்பினை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி பதிவு சேவையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |