அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எனது கால் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னி பத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.அதேபோன்று மதுரையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.