தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. மக்கள் இதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிய வகை நோயான கண்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஸ்டீராய்டு எனப்படும் மருந்து அதிகளவில் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என கூறப்படுகின்றது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் இதற்கு முன்பே இருந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தும் உள்ளது. அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. நோய் இருப்பவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் நம்பிக்கை தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.