பராமரிப்பு பணிக்காக முடக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தில் இணையதள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் ரேஷன் அட்டையை வைத்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் ரேஷன் அட்டை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. பேரிடர் காலங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரணத்தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டையில் மாற்றம் செய்வதற்கு, புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு நாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நான் அனைத்தையும் செய்து கொள்ள முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இணையதள சேவை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற காரணத்தினால் இந்த இணையதளம் மீண்டும் சேவைக்கு இயக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. இதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான எந்த மாற்றத்தையும் நாம் இணையதளத்திலேயே மேற்கொள்ள முடியும்.