Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒருசிலர் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின் செல்போனுக்கு வரும் OTP மூலம் லாகின் செய்து smart card details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள் நுழைந்த பிறகு Edit என்ற பட்டனை கிளிக் செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதில் திருத்தம் செய்ய தேவையான ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Categories

Tech |