தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 55 குழுக்கள் அமைத்து முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மேலும் சேலத்தில் இன்று முதல் காய்கறி சந்தைகள் அனைத்தும் மூடப்படும். நடமாடும் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.