Categories
சினிமா

FLASH NEWS: தேசிய விருது….. நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை…..!!!!

2020ஆம் ஆண்டுக்கான 68ஆவது தேசிய விருதுகள் மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழில் இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று
சிறந்த நடிகர்- சூர்யா
சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி
சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார்
சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா

இந்நிலையில் தேசிய விருது கிடைத்தது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம்.. அன்பான வாழ்த்துக்களால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள். சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருது கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது.அன்பின் வாழ்த்துக்களால் நெகிழ செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |