Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : தேர் சாய்ந்ததில் இருவர் பலி….. 10 பேர் காயம்….. பதைபதைக்கும் சம்பவம்…..!!!

தேர் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . காளியம்மன் கோவில் விழாவில் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றபோது திடீரென அச்சாணி முறிந்ததால் தேர் தலைகீழாக சாய்ந்தது.

அப்போது தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் விபத்தில பலத்த காயமடைந்த ஒருசிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .

Categories

Tech |