Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS : நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு …… குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர். எந்த ஒரு இயக்குனரும் எடுக்கப்படாத புதிய களம் கொண்ட படத்தை இவர் இயக்குவது தான் இவரது சிறப்பு. தற்போது வரை 10 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கும் பாலா பல விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக அவர் விக்ரமின் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் படம் திருப்தி தராத காரணத்தால் அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை வைத்து மீண்டும் வர்மா படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாள் என்பதால் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி செட்டி, மலையாள நடிகை நமீதா பைஜூ ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |