யூடியூப் சேனல் மூலமாக பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ மற்றும் ஆடியோவை பதிவிட்டதற்காக எழுந்த புகாரின் பேரில் பப்ஜி மதனை காவல்துறையினர் கைது செய்தனர் .இதன் பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முதுகுவலி காரணமாக பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
Categories