நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்க அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி கல்லூரிகளை படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், பள்ளி ஆசிரியர்கல் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். இது 3வது அலையை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.