Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பள்ளி விபத்து- 2 பேருக்கு நீதிமன்ற காவல்…. உத்தரவு…!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞான செல்வி, ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |