Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: பாஜகவின் முக்கிய நிர்வாகி சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு…!!!!

டெல்லியில் பாஜக முக்கிய நிர்வாகியான ஜீத்து செளத்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் ஜீத்து செளத்ரி (40). இவர் டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு செல்வதற்காக அவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீத்து செளத்ரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜீத்து செளத்ரி சொந்தமாக தொழில் செய்து வருகிறார். எனவே அவரது கொலைக்கு தொழில் போட்டி காரணமாக இருக்குமா? அல்லது அரசியல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |