தமிழில் மிக முக்கிய திரை பிரபலமான டான்ஸ் மாஸ்டர் கலா இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி சில முக்கிய காட்சிகளில் உள்ள பிரபலங்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளுக்கு மாறி வருகிறார்கள். மேலும் சில திரை பிரபலங்கள் அரசியலில் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா பாஜகவில் இன்று இணைந்தார். மதுரையில் நடந்த பாஜக கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் கலா மாஸ்டர் பாஜகவில் இணைந்தார். இதனை பாஜகவின் வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பாஜகவில் இணைவதால் தமிழகத்தில் பாஜக வலுபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.