மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை பாஜக தலைவர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அது மட்டுமன்றி முக்கிய பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் கடந்த சில நாட்களாக பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பாஜகவிற்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை பாயல் சர்க்கார் பாஜகவில் இணைந்துள்ளார். கொல்கத்தாவில் இன்று நடந்த கூட்டத்தில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் இந்நிலையில் இன்று பாஜகவில் தன்னை நடிகை இணைத்துக் கொண்டார். இவர் வங்காள மொழி படங்களிலும் சில இந்தி சீரியல்களிலும் நடித்து பிரபலமடைந்தவர்.