Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: பிபின் ராவத் பேசிய கடைசி வீடியோ…. உருக்கம்…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிபின் ராவத் பேசிய கடைசி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது 1971- இல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக வங்க தேசம் உருவானது.   இதன் ஐம்பதாவது ஆண்டு நினைவு கூறும் வகையில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி மூலம் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிபின் ராவத் வாழ்த்து தெரிவித்தார்.

Categories

Tech |