Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS : பிரபல இந்திய வீரருக்கு காயம்….. திடீர் விலகல்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்டு டிராஃப்ட் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளுமே 1-1 என்ற சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். இந்த சமயத்தில் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Categories

Tech |